அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு விளிப்புணர்வு ஊர்வலம் நேற்று (01) காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது.
ஒரு குழு அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்றின் ஒரு பகுதி பிரதேசதிற்கும் மற்றுமொரு குழு அக்கரைப்பற்றின் மறுபகுதி மற்றும் குடியிருப்பு, ஆலையடிவேம்பின் சில பகுதிகளுக்கும் துவிச்சக்கரவண்டிகளில் வெள்ளை நிற டீசேட் தொப்பி சகிதம் ஊர்வலமாக துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வினியோம் செய்தனர்.
11.00 மணியளவில் அக்கரைப்பற்று சுற்றுவட்டத்திற்கு இருகுழுக்களும் வந்தடைந்ததுடன் அங்கு வீதி நாடகம் டாக்டர் தமீம் தாதியர்களான விசாம் பரீஸ் மற்றும் சுகாதார உதவியாளர்களின் குழுவினால் அரங்கேற்றம் செய்யப்பட்டு 12.00மணியளவில் ஊர்வலம் நிறைவு பெற்றது.
இவ்வூர்வலம் சிறப்புற அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு MOH கள் ,அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸ் பிரிவு மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றோரின் உதவியும் ஒத்தாசையும் கிடைத்தது.
வைத்தியசாலை பராமரிப்புடன் மட்டும் நின்றுவிடாது நோய் வருமுன் தடுக்கும் களப்பணியிலும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை என்றும் முன்னிற்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு..