அம்பாறை, ஆதல்ஓயவில் விபத்து



அம்பாறை, ஆதல்ஓயாப் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில், நால்வர் காயமடைந்துள்ளனரென, அம்பாறை பொலிஸார் தெரிவித்தார். அம்பாறையிலிருந்து மாஓயா நோக்கிப் பயணத்த காரொன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களை, அம்பாறை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இவ்விபத்துடன் தொடர்பு​டைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் தெரிவித்த அம்பாறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  (படப்பிடிப்பு: வசந்த சந்திரபால)