குடும்பத் தகராறில் மனைவி பலி; கணவன் கைது



கல்கிஸை, சித்தார்த்த மாவத்தையின் பிரதான வீதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெண்ணொருவர் உயிரிழந்துள்ளாரென, கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பம், இன்று காலை 6.50மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலுள்ள கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், மனைவி மீது கணவன், கத்திக்குத்தினை மேற்கொண்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். 

படுகாயங்களுக்கு உள்ளான மனைவி, களுபோவில  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரெனவும் கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். 35 வயதுடைய மொஹமட் முஸ்தப்பா பாதிமா என்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், இச்சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான நபர் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் எனவும் கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.