மாடியிலிருந்து கீழே குதித்த வேலைக்காரி; காப்பாற்றாமல் வீடியோ எடுத்த எஜமானி (Video)



குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில், பெண்ணொருவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து ஜன்னலில் தொங்கிக்கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார்.
மற்றொரு பெண் அவரைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால், தொங்கிக் கொண்டிருந்த பெண் கீழே வீழ்ந்து விடுகிறார்.
வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பெண் வீட்டின் உரிமையாளர் எனவும் கீழே வீழ்ந்த பெண் அந்தக் குடியிருப்பில் வேலை செய்பவர் எனவும் தெரிய வந்துள்ளது.
வேலைக்காரப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக உத்தியோகப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்கு கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.