அலையில் சிக்குண்டு பாடசாலை மாணவி பலி



கந்தர கடற்கரையில் அலையில் சிக்குண்டு பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சுற்றுலா சென்றிருந்த வேளை தனது தந்தை மற்றும் தாயுடன் பாறையில் அமர்ந்திருந்த போது, அலை பலமாக வீசியதில் சிக்குண்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் சம்பவத்தில் பலியானவர் நுகேகொடை பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி எனத் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.