மீதொட்டமுல்லயில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.
குப்பை மேடு சரிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்லையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை பாதித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதைனை உறுதி செய்யவும் வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment