இறக்காமப் பதற்றம் தணிந்தது.




(ஹபிசுல் ஹக்)
இறக்காம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாணிக்கமடு என்ற பிரதேசத்தில் இருக்கும் மாய மலையில் கடந்த வருடம்  பெளத்த பெரும்பான்மை  இனவாதிகளால் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் வழக்குப் போகின்றமை  இலங்கை முஸ்லிம் அறிந்தது. 

 2017 / 04/ 20 ஆகிய இன்று  காலை 8 மணி அளவில் நான்கிற்கும் மேற்பட்ட பெளத்த துறவிகள் புத்தர் சிலை வைக்கப்பட்ட மாய மலைக்கு அருகாமையில்  துறவிகள் தங்கி வழிபடுவதற்கான ஒரு இல்லத்தை அமைக்கு நோக்கில் அதற்கான கற்கள் போன்ற வற்றுடன் சண்டித்தனத்துடன் வருகை தந்து இறக்காமப் பிரதேச மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளனர் .

சம்பவ இடத்துக்கு அப்பாரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அதிகாரிகள் பௌத்த துறவிகளை தமணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதுடன் பொது மக்களை கலைந்து செல்லுமாறும் பணித்தனர்.