காய்ச்சலினால் வாழைச்சேனையில் சிறுமி மரணம்




கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதியில் ஆறு நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதிதில் வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா (வயது – 08) என்ற பாடசாலை மாணவியே காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அதனை அடுத்து நேற்று மாலை சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிறுமி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். 

மரணமடைந்த வாழைச்சேனை ஹைராத் குறுக்கு வீதிதில் வசிக்கும் கலந்தர் பாவா பாத்திமா ஷிபா (வயது – 08) என்ற சிறுமி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.