ஜூன் முதலாம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு டெங்கு ஒழிப்பு காலமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை ஒழிப்பதற்கான தமது சமூக பொறுப்புக்களை நிறைவேற்ற இணையுமாறு ஜனாதிபதி அரச, தனியார் பிரிவுகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடமும் கோரியுள்ளார்.
டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பு தொடர்பில் தற்போது செயற்படுத்தப்படும் வேலைத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்துமூல அறிக்கையை விரைவில் தனக்கு பெற்றுத் தருமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு வாரமும் தெரிவு செய்யப்பட்ட தினம் ஒன்றில், அனைத்து தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பான தௌிவுபடுத்தும் வேலைத் திட்டங்கள் மற்றும் சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Post a Comment
Post a Comment