நீணாக்கேணியில் நேற்று அசாதாரண நிலை



திருகோணமலையில் நேற்று இரவு சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீணாக்கோணி கிராமத்திற்குள் புகுந்த சிலர் நீணாக்கேணி கிராமத்தில் பொது உடைமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக அத தெரண நிருபர் தெரிவித்துள்ளார். 

அதையடுத்து அந்த கிராம வாசிகள் பக்கத்து கிராமமான செல்வநகர் ஹூதா ஜூம்மா பள்ளியை அடுத்துள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். 

பதற்ற நிலையை அடக்கும் முகமாக மூதூர், சேருநுவர, சம்பூர் நிலையங்களின் பொலிஸார் மேலதிகமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதுதவிர, சர்தாபுர பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.