(க.கிஷாந்தன்)
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு பலியாகிய திம்புள்ள பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த ராமர் நிரோஷனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் அக்குடும்பத்தாருக்கு ஒரு தொகை பணத்தையும் 06.06.2017 அன்று மாலை வழங்கியுள்ளார்.
கிறேக்கிலி தோட்டத்திற்கு நேரடியாக விஜயத்தை மேற்கொண்ட ராஜமணி பிரசாத் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் வீட்டார்களை நேரடியாக சந்தித்து தனது அனுதாபங்களை தெரிவித்ததுடன் அக்குடும்பத்தாரின் எதிர்கால நலத்திற்காக இந்த குறித்த தொகை பணத்தை உதவி தொகையாக வழங்கியமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment