இரண்டு பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் சாவடியில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் இரண்டு நபர்களை உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தல் மற்றும் அவர்களின் வீட்டை தீயிட்டு எரித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவர்கள் மீது சட்ட மா அதிபரினால் 43 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன், அதில் 41 குற்றங்களில் இருந்து அவர்களை மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமசந்திர நிபந்தனையற்ற விடுதலை செய்தார்.
சுமார் இருபது ஆண்டுகளின் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை கூறத்தக்கது.

Post a Comment
Post a Comment