தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி மழையால் தடை பட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் பாகிஸ்தான் வெற்றி.
பிரிட்டனின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 27 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 119 ரன்களுடன் இருந்தது. அப்போது மழை குறுக்கிடவே ஆட்டம் தடைப்பட்டது. இதன்பின் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி கூடுதலாக 19 ரன்கள் சேர்த்ததையடுத்து, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பி பிரிவில் உள்ள இலங்கை நீங்கலாக மற்ற அணிகள் அனைத்தும் 2 புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment