வேன் விபத்து - 19 பேர் காயம்



(க.கிஷாந்தன்)

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை ரில்பொல பிரதான வீதியில் வெளிவத்த பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

30.06.2017 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்லேகட்டுவ பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு யாத்திரை பயணத்தை மேற்கொண்ட குறித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் 19 பேர் பயணித்துள்ளதாகவும், 19 பேரும் காயங்களுக்குள்ளாகி பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.