இலங்கை அணியை துரத்தியடித்து பந்தாடிய சிம்பாப்வே



இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றுள்ளது.


சுற்றுலா சிம்பாவ்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. 


காலியில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 316 ஓட்டங்களை பெற்றது. 



இந்த போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது. 0 



இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமை வகித்தார். 



துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 86 ஓட்டங்களையும், உப்புல் தரங்க 79 ஓட்டங்களையும் பெற்றனர். 



பந்துவீச்சில் டென்டய் சட்டாரா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், சொலமன் மயர் 47 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டையும் கைப்பற்றினர். 



இந்தநிலையில் சிம்பாப்வே அணிக்கு 317 என்ற ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 47.4 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. 



துடுப்பாட்டத்தில் சொலமன் மயர் 96 பந்துகளை எதிர்கொண்டு 112 ஓட்டங்களை பெற்றார். 



ஸேன் வில்லியம்ஸ் 65 ஓட்டங்களையும், சிகெந்தர் ரஸா 67 ஓட்டங்களையும் பெற்றனர்.