சர்வதேச ஒருநாள் தொடரில் இலங்கைக்கு அதிர்ச்சியளித்த சிம்பாப்வே, டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
கிரேக் எர்வின் அபார சதமடித்ததுடன், சிம்பாப்வே அணி 08 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 70 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
என்றாலும், ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த சிக்கிந்தர் ராசா மற்றும் கிரேக் எர்வின் ஜோடி 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டது.
சிக்கிந்தர் ராசா 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை லாவகமாக எதிர்கொண்ட கிரேக் எர்வின் சதமடித்தார்.
இது டெஸ்ட் அரங்கில் கிரேக் எர்வின் பெற்ற இரண்டாவது சதமாகும்.
கிரெக் ஏர்வின் 151 ஓட்டங்களுடனும் டொனால்ட் டிரிபானோ 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், டெஸ்ட் அரங்கில் 375 விக்கெட்டுக்கள் எனும் மைல்கல்லை எட்டினார்.
அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரங்கன ஹேரத் 16 ஆம் இடத்தில் உள்ளார்.


Post a Comment
Post a Comment