இரண்டு வாரங்களில் மிளகுக்கு நிலையான விலை



அடுத்த இரண்டு வாரங்களில் மிளகு கொள்வனவிற்கு நிலையான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கூறினார். 

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 

அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தேவையான நிதியை நிதியமைச்சின் ஊடாக ஒதுக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். 

அத்துடன் நாட்டின் கிராமிய கைத்தொழிலை மேலிம் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

மிளகு விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறி நேற்றைய தினம் இரத்தினபுரி, கொலன்ன பிரதேச மிளகு உற்பத்தியாளர்கள் எம்பிலிபிட்டிய - இரத்தினபுரி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை கூறத்தக்கது.