இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நான்கு ஊழியர்களை தகாத வார்த்தைகளில் தூற்றி, மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சந்தேகநபரான முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல உள்ளிட்ட மூவர், முறைப்பாட்டாளர்கள் நால்வரிடம் நீதிமன்றத்தில் நேற்று. மன்னிப்புக் கோரினர்.
இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டின் பிரகாரம், பகிரங்க நீதிமன்றத்தில் சம்பிரதாயங்களுக்கு அமைய, கைகூப்பி வணங்கி மன்னிப்புக் கோரியதன் பின்னர், வழக்கை சமநிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவபிரிய அபேசிங்க மற்றும் பீ.டி.சுகதபால ஆகியோரும் வழக்கின் ஏனைய சந்தேகநபர்களாவர்.
2010 பொதுத்தேர்தல் காலப்பகுதியில் குறித்த ஊழியர்களைத் தூற்றி, மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.


Post a Comment
Post a Comment