அதிகாரத்தை அளவிற்கதிகமாக பயன்படுத்தியுள்ளனர்



யாழ். பருத்தித்துறை துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் பொலிஸ் உத்தியோத்தர்கள் அதிகாரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறினார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிவத்த கருத்து….
இதுவரை நாம் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோத்தர்கள் அதிகாரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதனால் அந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி ஏற்பட்டது. தவறிழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுப்போம். அந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோத்தர்களினால் தவறு ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நாம் பின்வாங்குவதில்லை