கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று (11) காலை சுபநேரத்தில் ஆளுநர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், பிரதியமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப், கிழக்கு மாகாண அமைச்சர்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


Post a Comment
Post a Comment