நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லொறி ஒன்றை ஓட்டி வந்தவர் பொதுமக்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகர போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு தீவிரவாத தாக்குதல் என அழைக்கப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நியூயார்க்கில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம். தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும், காயமடைந்தோருக்கும் எனது அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.