கஞ்சா வியாபாரிக்கு மறியல்



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை கொட்பே பகுதியில் மூவாயிரத்தி ஜம்பது மில்லி கிரேம் கேரளா கஞ்சாவை விற்பனை செய்தமை மற்றும் இருபதாயிரத்தி ஜம்பது மில்லி கிரேம் கஞ்சா போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு    நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சீனக்குடா பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று திங்கள்கிழமை  நீதவான் முன்னலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது  திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க  இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார்.


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை,சிங்ஹபுர,சங்கம பகுதியைச்சேர்ந்த வி.எம்.எம்.சரத் குமார (28வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா கொட்பே பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து  விற்பனையில் ஈடுபட்டு வருபவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தொடர்ந்தும் அவர் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் சீனக்குடா பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை  பெண்னொருவரை சந்தேகத்தின் பேரில்  சோதனையிட்ட போது பெண் அணிந்திருந்த ஆடைக்குள் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் வழங்கிய தகவலையடுத்து  பொலிஸார் வழங்கிய பணத்தை எடுத்துக்கொண்டு வாங்கி வருமாறு கூறியதையடுத்து மீண்டும் அப்பெண் அவரிடம் கஞ்சாவை வாங்கிய வேளை அவரை கைது செய்ததாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது மூவாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞனை 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.