போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய பிக்கு



சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் வைத்து நேற்று (20) மாலை, 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டுடன் பிக்கு ஒருவர், சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவத்தேகம மகமெத்தேவ பிரதேச விகாரை ஒன்றில் பணியாற்றும் பிக்குவே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு, சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கடைகளில், ஆயிரம் ரூபாய் நாணயத் தாளை கொடுத்து, பலவிதமான பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.