அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது.
அதன்படி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சம் 40 ஆயிரம் ரூபாவாகவும் பிரதி அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகவும் மாற்றம் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.


Post a Comment
Post a Comment