உகனயில், மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி



அம்பாறை, உகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமனலபெந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது. 

விபத்தில் பலத்த காயமடைந்த அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

உகன, ஹிமிதுருவ பகுதியை சேர்ந்த 71 வயதுடைய உக்குபண்டா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் உகன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.