பரீட்சைகள் நடைபெறவிருக்கும் பாடசாலைகளில் டெங்குதடுப்பு சிரமதானம்!



காரைதீவு  நிருபர் சகா
 
சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கமைவாக டெங்குதடுப்பு செயற்பாட்டு சிரமதானத்தை காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபர் சீ.திருச்செல்வம் தலைமையில் பெற்றோர்கள் முன்னெடுத்தனர். அதில் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் பிரதிஅதிபர் கே.புண்ணியநேசன் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த.உயர்தரப்பரீட்சை நடைபெறவிருக்கும் அரச பாடசாலைகள் அனைத்திலும் பரீட்சைக்கு முன்பதாக டெங்குத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சும சுகாதாரஅமைச்சும்  கேட்டுக்கொண்டிருக்கின்றது.

இவ்வறிவுறுத்தல் சகல வலயங்களுக்கும் அனுப்பப்பட்டு பாடசாலை அதிபர்களுக்கு எத்திவைக்கப்பட்டுள்ளது.தரம்5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.

எனவே அதற்கு முன்பதாக வெள்ளி அல்லது சனி தினங்களில் டெங்குத்தடுப்பு சூழல்துப்பரவாக்கும் பணிகளை பரீட்சை நடைபெறவிருக்கும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதேபோன்று க.பொ.த.உயர்தரப்பரீட்சை மறுநாள் 6ஆம் திகதி ஆரம்பமாவதால் முன்கூட்டியே இந்நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.