இலங்கை கிரிக்கட்டுக்கு கால அவகாசம்



இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. 

அதன்படி எதிர்வரும் 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி வரையில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது. 

அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமை தொடர்பில் மிள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியிருந்தமை கூறத்தக்கது.