இ.தொ.காவின் பொதுச் செயலாளராக அனுசியா நியமனம்



இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக அனுசியா சிவராஜாவும் பிரதிப் பொதுச் செயலாளராக ஆறுமுகம் தொண்டமானின் புதல்வர் ஆ.ஜீவன் தொண்டமானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸின் மறைந்தத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 105ஆவது ஜனன தினம், கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்  தொகுதியிலும் பின்னர், காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானிலும், இன்று (30) காலை கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸின் தேசிய சபை, நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் பொது செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் தலைமையில் கூடப்பட்டுள்ளது.
இதில் இதுவரை பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த ஆறுமுகம் தொண்டமான் எம்.பி, காங்கிரஸின்  தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன், பொதுச் செயலாளர் பதவிக்கு காங்கிரஸின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இயங்கி வந்த,  மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா தேசிய சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.