மின்சாரம் தாக்கியதில் இராணுவ சிப்பாய் பலி



மின்சாரம் தாக்கியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (29) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காலி, புஸ்ஸ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய வவுனியா, பூஓய இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

மின்சாரம் தாக்கி காயமடைந்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.