பிறந்து 28 நாளான சிசுவை உயிருடன் புதைத்த தாய்



பிறந்து 28 நாட்களான சிசுவிற்கு தொண்டை பகுதியில் பால் இருகியதாக கூறி குறித்த சிசுவை உயிருடன் புதைத்து கொலை செய்த தாய் மற்றும் தாயின் தாய் ஆகிய இருவரை சந்தேகத்தின் பெயரில் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். 

ஹட்டன், கொட்டகலை யூனிபில்ட் தோட்ட பகுதியில் இன்று (03) காலை 11.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பிறந்து 28 நாட்களான குறித்த சிசுவிற்கு பால் கொடுத்து உறங்க வைப்பது போல் தான் வீட்டுக்கு முன்பால் குழி தோன்றி புதைத்துள்ளதாகவும் சிசு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து ஹட்டன் பொலிஸார் குறித்த சிசு புதைக்கபட்ட இடத்தை இனங்கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தனது கணவருக்கும் குறித்த பெண்ணிற்கு இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த சிசுவை உயிருடன் புதைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

திவ்யநாதன் வென்னிலா என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை, பிரதான சந்தேக நபரான குறித்த பெண்ணின் கணவர் கண்டியில் தொழில் செய்து வருவதாகவும் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர்களான இரு பெண்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை​மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 

(மலையக நிருபர் சதீஸ்குமார்)