வடமேல் மாகாண பட்டதாரி #ஆசிரியர் நியமனம்


வடமேல் மாகாண பட்டதாரி #ஆசிரியர் நியமனம்

வடமேல் மாகாண பாடசாலைகளில் காணப்படுகின்ற இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் தரத்தின் I (அ) வகுப்பின் வெற்றிடங்களுக்காக மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல்.

வடமேல் மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்படும் இலங்கை ஆசிரியர் சேவையின் வெற்றிடங்களுக்காக வடமேல் மாகாண
அரச ஆசிரியர் சேவையின் சேவை யாப்பின் அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் தரத்தின் I (அ) வகுப்புக்கு
மாவட்ட மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு இந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதன் படி தகைமை பெற்ற வடமேல் மாகாணத்தில்
நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் மொழி மூலப் பாடங்களுக்காக வேறு மாகாணங்களில் வதிவோரும் விண்ணப்பிக்கலாம்.

விடய இலக்கம் விடயம்

03 கணிதம்
04 விஞ்ஞானம்
10 சித்திரம்
15 தகவல் தொழில்நுட்பம்
16 சுகாதாரமும் உடற் கல்வியூம்

2. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களுக்காக மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதுடன்,
அந்த ஆட்சேர்ப்பின்போது உரிய மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். குருநாகல் மாவட்டத்தை
வசிப்பிடமாகக் கொண்டவர்கள் குருநாகல் மாவட்டப் பாடசாலைகளில் உள்ள பாட வெற்றிடங்களுக்கும், புத்தளம் மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் புத்தளம் மாவட்டப் பாடசாலைகளில் உள்ள பாட வெற்றிடங்களுக்கும் விண்ணப்பிக்க
வேண்டும். ஒரு மாவட்டத்தின் வெற்றிடங்களை நிறைவூ செய்வதற்கு தகுதியானவர்கள் போதுமானதாக இல்லாத போது அடுத்த மாவட்டத்தில் அந்த பாடத்திற்கு தகுதியானோரில் இருந்து வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழி மூல பாடங்களுக்கு தகுதி வாய்ந்தோர் போதிய அளவூ வடமேல் மாகாணத்தினுள் இல்லாதபோது மாத்திரம் குருநாகல்
மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு வேறு மாகாணங்களில் இருந்து விண்ணப்பித்த தகுதி வாய்ந்தோரில் இருந்து வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

3. காணப்படும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சேவை அவசியத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் எண்ணிக்கை
தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிங்கள, தமிழ், ஆங்கில மொழி மூலங்களில் உரிய பாடங்களுக்குக்
காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை முதலாம் உபபட்டியலில் காட்டப்பட்டுள்ளது.

5. கல்வி மற்றும் ஏனைய தகைமைகள்:

5.1. கல்வித் தகைமைகள்

(i) கற்பித்தல் நடவடிக்கைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷேடமாக்கப்பட்ட பாடங்களுக்குரியதாக, பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் அல்லது பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட உபபட்டியல் 01 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கான பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பட்டம்விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் கடைசித் திகதிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும்.

மற்றும்

(ii) கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழி, கணிதம் ஆகிய
பாடங்களில் சித்தி பெற்றும் இருக்க வேண்டும்.
மிக முக்கியம் ( விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் )

 தமது பட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கக் கூடிய பாடங்கள் தொடர்பில் விண்ணப்பதாரிகள் அவதானம்
செலுத்த வேண்டும்.
 பட்டத்திற்காக கற்ற பிரதான பாடம் / பாடங்கள் தொடர்பில் மட்டும் குறிப்பிட்ட பாட வெற்றிடத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்பிக்கக் கூடிய பாடங்களின் உச்ச எல்லை 03 ஆகும். விருப்பின் முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிடப்படல் வேண்டும்.
 விண்ணப்பித்த பாடம் / பாடங்கள் எக்காரணம் கொண்டும் விண்ணப்பித்த பின்னர் மாற்ற அனுமதிக்கப்பட
மாட்டாது.

5.2. உடல் மற்றும் உளத் தகைமைகள் :
சகல விண்ணப்பதாரிகளும் ஆசிரியர் ஒருவராக கடமையாற்றுவதற்கு தகுந்த உடல், உள ஆரோக்கியத்துடன் இருக்க வேணடும் .;

5.3. வயது :

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள்பபடும் திகதிக்கு ஆகக் குறைந்த வயதெல்லை 21 ஆகும ; . ஆகக் கூடிய வயதெல்லை 40 ஆகும்.

5.4. ஏனைய தகைமைகள் :

(i) விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.

(ii) சிறந்த நற்பண்புகளைக் கொண்டவராகவூம், உடலாரோக்கியம் மிக்கவராகவூம் காணப்பட வேண்டும்.

(iii) வடமேல் மாகாணத்தின் எப்பகுதியிலும் சேவையாற்ற தயாராக இருக்க வேண்டும்.

(iv) வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித்
திகதிக்கு ஆகக் குறைந்தது அண்மிய 03 வருடங்கள் வடமேல் மாகாண அதிகாரப் பிரதேசத்தினுள் நிரந்தர
வசிப்பாளராக இருக்க வேண்டும். ( வாக்காளர் இடாப்பின் மூலம் நேர்முகப் பரீட்சையின்போது உறுதி செய்தல்
வேண்டும். )

I ஆம் பகுதியில் சொல்லப்பட்ட தமிழ் மொழி மூல விஷேட பாடங்களுக்கு விண்ணப்பிக்கின்ற வேறு மாகாண
விண்ணப்பதாரிகள் தமது வதிவை தத்தமது பிரதேச செயலாளரின் ஒப்பத்துடன் கூடிய கிராம சேவகரால் வழங்கப்பட்ட
வதிவிடச் சான்றிதழ் ஒன்றை நேர்முகப் பரீட்சையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

6. சேவை நிபந்தனைகள் :

(i) அரச / மாகாண அரச சேவையின் நியமனங்களை கட்டுப்படுத்தும் பொதுவான நிபந்தனைகளுக்கும்இ வடமேல்
மாகாண அரச சேவையின் இலங்கை ஆசிரியர் சேவை யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும்/ அந்த
யாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அல்லது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவூள்ள திருத்தங்களுக்கும் கட்டுப்பட்டு
தெரிவூ செய்யப்படும் விண்ணப்பதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் தரத்தின் I (அ) வகுப்புக்கு
நியமிக்கப்படுவார்கள்.

(ii) இப்பதவி நிரந்தரமானது. உங்களுக்கு உரித்தான ஓய்வஷுதியம் தொடர்பில் அரசு எதிர்காலத்தில் மேற்கொள்ளும்
கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும்.

(iii) இப்பதவிக்கு நியமிக்கப்படுவது 03 வருட நன்னடத்தைக் காலத்திற்கு உட்பட்டாகும்.

(iv) வடமேல் மாகாண அரச சேவையின் இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் அடிப்படையில் பதவி உயர்வூகள் வழங்கப்படும்.

(v) 2014.01.20 ஆந் திகதி அ.நி.சு 01/2014 இன் படியூம் அதன் தொடர்ச்சியான சுற்று நிருபங்களின் படியூம் பணியிலமர்ந்து 05 வருடங்களுக்குள் ஊடக மொழிக்கு இரண்டாம் அரச கரும மொழியில் தேர்ச்சி பெறல் வேண்டும்.

(vi) வடமேல் மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரிகள் முதல் நியமனம் பெறும் மாவட்டத்தினுள்
குறைந்த பட்சம் ஆறு வருடங்கள் சேவையாற்ற வேண்டும். வேறு மாகாணங்களை வதிவிடமாகக் கொண்டு நியமனம்
பெறுவோர் முதல் நியமனம் பெற்றுக் கொள்ளும் மாவட்டத்தினுள் குறைந்த பட்சம் 10 வருடங்கள் சேவையாற்ற
வேண்டும்.

(vii) தமது முதல் நியமனம் பெறும் பாடசாலை கஷ்டப் பாடசாலை ஃ அதி கஷ்டப் பாடசாலையாக இல்லாதவிடத்து தமது
சேவைக்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது குறைந்த பட்சம் 05 வருடங்கள் கஷ்டப் பாடசாலை ஃ அதி கஷ்டப்
பாடசாலை ஒன்றில் கடமையாற்றுவதற்கு கடப்பாடுடையவராவார்.

7. ஆட்சேர்ப்பு :

7.1. ஆட்சேர்ப்பு செய்யப்படும் முறைமை :
குருநாகல் மாவட்டத்தில் வசிப்பவர்கள் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் பாடங்களுக்கான
வெற்றிடங்களுக்கும், புத்தளம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் புத்தளம் மாவட்டத்தின் பாடசாலைகளில் உள்ள
பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கும் மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.

குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல விசேட பாடங்களுக்கு தகைமை பெற்றவர்கள்
போதியளவூ இல்லாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் ஏனைய மாவட்டங்களின் விண்ணப்பதாரிகள் தொடர்பில் கவனம்
செலுத்தப்படும்.

தெரிவூ செய்வதற்காக எழுத்து மூலப் பரீட்சை ஒன்று நடைபெறும். எழுத்து மூலப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்
பாடங்களுக்கான வெற்றிடங்களின் அடிப்படையில் தகைமைகளைப் பரிசீலிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கும்
செயன்முறைப் பரீட்சைக்கும் முன்னிருத்தப்பட்டு புள்ளிகளின் வரிசைக் கிரமத்தின் படி சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

7.2. எழுத்து மூலப் பரீட்சை - இந்த வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது.

பாடம் உச்ச புள்ளிகளின் சித்தியடைவதற்கு அவசியமான ஆகக்
எணணிக ; கை குறைந ; ;த புள்ளிகளின் எண்ணிக்கை

பொது உளச் சார்பு ( 01 மணித்தியாலம்) 100 40

பொது அறிவூப் பரீட்சை ( 01 மணித்தியாலம் ) 100 40

பாடத் திட்டம் :

பாட இலக்கம் 01 – பொது உளச் சார்பு சோதனை :
விண்ணப்பதாரியின் திறன்கள்இ தர்கத் திறன் என்பவற்றை மதிப்பீடு செய்யூம் நோக்கில் இந்த வினாப்பத்திரம்
தயாரிக்கப்படும். இது பல்தேர்வூ அல்லது குறு விடை வினாக்கள் 50 ஐ உள்ளடக்கி இருக்கும். இந்த சகல வினாக்களுக்கும்
விடையளிக்க வேண்டும். ( ஒரு வினாவூக்கு 02 புள்ளிகள் வீதம் 100 புள்ளிகள் )

பாட இலக்கம் 02 - பொது அறிவூ :

சமூக, பொருளாதார, அரசியல் துறைகள் தொடர்பில் பொது அறிவைப் பரீட்சிக்கும் பல்தேர்வூ வினாக்கள் 50 ஐக்
கொண்டிருக்கும். ( ஒரு வினாவூக்கு 02 புள்ளிகள் வீதம் 100 புள்ளிகள் )

7.3. பரீட்சை விதிமுறைகள் :

(i) இப்பரீட்சைக்கு சிங்கள, தமிழ், ஆங்கில மொழி மூலங்களில் விண்ணப்பிக்கலாம்.

(ii) சகல விண்ணப்பதாரிகளும் இரண்டு ( 02 ) வினாப்பத்திரங்களுக்கு தோற்றுதல் வேண்டும்.

(iii) சகல விண்ணப்பதாரிகளும் சகல வினாப்பத்திரங்களுக்கும் தோற்றுதல் வேண்டியது ஒரே மொழி மூலத்திலாகும்.
அந்த மொழிமூலம் அவர் நியமனம் பெற எதிர்பார்க்கும் மொழிமூலமாக இருக்க வேண்டும்.

(iv) ஆங்கிலமொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கில மொழிமூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

(v) விண்ணப்பதாரிக்கு தன்னுடைய விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிமூலத்தை மாற்றுவதற்கு
அனுமதிக்கப்படமாட்டா.

7.4. நேர்முகப் பரீட்சை :

ஆசிரிய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளை பூர்த்தி
செய்திருக்கிறாரா என்பதைப் பரீட்சித்தல், உடல் தகைமை மற்றும் உளத் தகைமையைப் பரீட்சித்தல், பட்டம் வகுப்பு சித்தி
மற்றும் மேலதிக தகைமைகள் என்பவற்றுக்கு புள்ளிகளை வழங்குவதற்காக நேர்முகப் பரீட்சை நடைபெறும்.

( அ ) வகுப்புச் சித்திகளுக்காக புள்ளி வழங்கல் பின்வருமாறு அமையூம். ( அதிக பட்சம் 07 புள்ளிகள் )
i ஆம் வகுப்பு 07 புள்ளிகள்
ii ஆம் வகுப்பு உயர் 05 புள்ளிகள்
iii ஆம் வகுப்பு கீழ் 03 புள்ளிகள்

(ஆ) மேலதிக தகைமைகளுக்குப் புள்ளிகளை வழங்குதல் ( அதிக பட்சம் 10 புள்ளிகள் )

தொ. இல. நியதிகள் உச்ச புள்ளிகள்

01 தர்மப் பாடசாலை இறுதிப் பரீட்சை சான்றிதழ் அல்லது ஏனைய மதம் ஒன்றிற்கு அதற்குச் சமனான பரீட்சை ஒன்றில் சித்தி பெற்றமையை உறுதி செய்யூம் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ் 05
02 விளையாட்டு, அழகியல் போன்ற இணைப் பாடவிதான செயற்பாடுகளில் அரசின் அல்லது அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போட்டி ஒன்றில் தேசிய மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம்

(ஆ) எந்தவொரு பாடத்திற்கும் / பாடங்களிற்கும் ஒரு மாவட்டத்தில் தகைமை பெற்ற விண்ணப்பதாரிகள் தெரிவூ செய்யப்பட்டு முடிவடைந்த பின்னரும் வெற்றிடங்கள் காணப்படுமாயின் அந்தந்த பாடங்களுக்கு விண்ணப்பித்த மற்றைய மாவட்ட விண்ணப்பதாரிகளில் இருந்து முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் தெரிவூ செய்யப்படுவார்கள்.

I ஆவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் மொழி மூல விசேட பாடங்கள் தொடர்பில் இரண்டு மாவட்டங்களிலும்
விண்ணப்பதாரிகள் இல்லாதபோது மாத்திரம் ஏனைய மாகாண விண்ணப்பதாரிகள் தெரிவூ செய்யப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

(இ) ஏதேனும் ஒரு விண்ணப்பதாரி இரண்டு ( 02 ) அல்லது மூன்று ( 03 ) பாடங்களுக்கு தெரிவூ செய்யப்படும் சந்தர்ப்பத்தில்
அவர்களுக்கு நியமனம் வழங்கும் பாடம் தொடர்பில் வடமேல் மாகாண அரச சேவைகள் ஆணைக் குழு தீர்மானம்
எடுக்கும்.

10. பரீட்சைக் கட்டணம்:

பரீட்சைக் கட்டணமாக ரூ. 600.00 ஐ வடமேல் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் வருமானத் தலைப்பு 2003-02-13
வரவூ வைக்கப்படுமாறு வதிவிடம் அமைந்துள்ள பிரதேச செயலாளர் காரியாலயத்தில் செலுத்தி தன்னுடைய பெயரில் பெற்றுக் கொள்ளும் வமே.மா.ச.நி 2 பற்றுச் சீட்டினை விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.
தமிழ் மொழி மூல விசேட பாடங்களுக்கு வேறு மாகாணங்களில் இருந்து குருநாகல் மாவட்டத்திற்கு விண்ணப்பிக்கின்ற
விண்ணப்பதாரிகள் குருநாகல் பிரதேச செயலகத்திலும்இ புத்தளம் மாவட்டத்திற்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரிகள்
புத்தளம் மாவட்டத்திற்கும் பணத்தை செலுத்தி வமே.மா.ச.நி 2பற்றுச் சீட்டினை விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டி அனுப்ப
வேண்டும்.

வமே.மா.ச.நி. 2 பற்றுச் சீட்டினைத் தவிர வேறு நிறுவனங்களில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் பற்றுச் சீட்டுகள் அல்லது
காசுக் கட்டளைகள், காசு என எவையூம் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்பதுடன், எக்காரணம் கொண்டும் செலுத்தப்பட்ட
பரீட்சைக் கட்டணம் மீளச் செலுத்தப்படமாட்டாது என்பதையூம் இந்த பரீட்சைக் கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் வேறு
எந்தப் பரீட்சைக்கும் பயன்படுத்துவதற்கு மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்பதையூம் கவனத்தில் கொள்ளவூம்.
( பற்றுச் சீட்டின் நிழற் பிரதி ஒன்றை எதிர் கால பயன்பாட்டுக்காக தம்வசம் வைத்துக் கொள்ளலாம்.)

11. விண்ணப்பிக்க வேண்டிய முறை :

11.1. ( அ ) விண்ணப்பங்கள்யூA4 ( 21 x 29 செ.மீ. ) அளவூள்ள தாள்களைப் பயன்படுத்தி 01 தொடக்கம் 06 வரை முதலாவது பக்கத்திலும் இலக்கம் 07 இலிருந்து மற்றைய பக்கங்களிலும் உள்ளடங்குமாறு விண்ணப்பம் தயாரிக்கப்பட வேண்டும்.

( ஆ ) மாதிரி விண்ணப்பப்படிவத்துடன் இணங்காத விண்ணப்பங்கள், பூரணமற்ற விண்ணப்பங்கள், அடிப்படைத்
தகைமை பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும். மேலும் பூரணப்படுத்தப்படும் விண்ணப்பப்படிவங்கள் அறிவித்தலில் காட்டப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்துடன் ஒத்ததா என்பது தொடர்பில் விண்ணப்பதாரிகள் கவனம் செலுத்த வேண்டும். பூரணப்படுத்தப்பட்ட  விண்ணப்பப்படிவத்தின் நிழற் பிரதி ஒன்றைத் தம்வசம் வைத்திருப்பது பயனளிக்கலாம்.

( இ ) விண்ணப்பித்த பாடம் / பாடங்கள் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்பதுடன், ஒரு விண்ணப்பதாரிக்கு ஒரு விண்ணப்பம் மாத்திரமே முன்வைக்க முடியூம்.

( ஈ ) விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி 2019.01.14 ஆகும்.

11.3. முறையாகப் பஷுரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 2019.01.14 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்
கூடியதாக பின்வரும் முகவரிக்கு பதிவூத் தபாலில் அனுப்பப்பட வேண்டும். இத்திகதியின் பின்னர் எந்த ஒரு
விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

செயலாளர்,
வடமேல் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு,
வடமேல் மாகாண சபை அலுவலகத் தொகுதி,
குருநாகல்.

விண்ணப்பத்தை அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “வடமேல் மாகாண ஆசிரியர் சேவைக்கு
பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல் - 2018” எனக் குறிப்பிடுதல் வேண்டும்.

11.4. முறையாக பரீட்சைக் கட்டணம் செலுத்தி 2019.01.14 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும். ஆனாலும் இந்தப் போட்டிப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படலானது மேற்கூறிய தகைமைகளை பூர்த்தி செய்தமையை ஏற்றுக் கொண்டதாகக் கருதப்படமாட்டாது.

தமிழ் வர்த்தமானி மாதிரி விண்ணப்பபடிவம்: www.documents.gov.lk/files/gz/2018/12/