(காணொளி)கண்டியில்,தெய்வாதீனமாக உயிர் தப்பிய சிறுவர்கள்



இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டினுவர வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் தீப்பரவியுள்ளது.
இதன்போது அக்கட்டிதத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் சிக்கியுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் பரபரப்பான மயிர்கூச்செறியும் சம்பவமும் பதிவாகி உள்ளது. மேலும் சிலர் அங்கு சிக்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.