மதுஷ் உள்ளிட்ட 31 பேருக்கும் விளக்கமறியல்



டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட, இலங்கையின் பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும், எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள், நேற்றைய தினம் (14), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.