(க.கிஷாந்தன்)
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்கென அரசாங்கம் 1500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சர் வீ.ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு இந்த நிதி தலா ஒருவருக்கு 187 மில்லியன் ரூபாய் வீதம் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
நுவரெலியா லவர்சிலீப் தோட்டத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் காட்ட முறையில் செப்பனிடப்பட்ட பிரதான வீதியின் திறப்பு விழா சனிக்கிழமை (16) இடம்பெற்றது.
இதில் அமைச்சர் வீ.ராதாகிருஸ்ணன் மத்திய மாகாணசபை முன்னால் உறுப்பினர் இரா.ராஜாராம்இபெருந்தோட்ட மனித வள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மக்கள் மத்தியில் உறையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது.
இவ்வருட இறுதிக்குள் நாட்டில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது .அந்தவகையில் முதலாவதாக மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுமேயானால் அந்த தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து அதிகப்படியான தமிழ் பிரதிகளை தெரிவு செய்து அனுப்புவதற்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.
அதேவேளையில் தமிழ் பிரதநித்துவத்தை அதிகரிக்கும் பட்சத்தில் அரசாங்கம் கூடுதலான நிதிகளை ஒதிக்கீடு செய்யும் எனவும் அதனூடாக பெருந்தோட்ட பிரதேசங்களில் பின்தங்கிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment