தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவுக்கு தற்காலிக அடிப்படையில் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ரத்கம பிரதேசத்தில் கடந்த 23 ஆம் திகதி இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதனால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சுகபோக வேன் ஒன்று காலி தொகுதி குற்றப்புலனாய்வுப் பிரிவினால் அக்மீமனயில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Post a Comment
Post a Comment