ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கோட்டாவும் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்படுவர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை சாட்சியமளிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார். 

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் உள்ளிட்டவர்களை தெரிவுக்குழுவுக்கு அழைப்பதாக கூறினார். 

அதன்பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு நிறைவடையும் என்று அவர் கூறினார். 


--- Advertisment ---