அறிவுப்பசியை தீர்த்துவரும் ஆலயம்,பென்னிங்டன் நூலகம்!


ஸ்ரீவில்லிபுத்தூரில் 144 ஆண்டுகளாக மக்களின் அறிவுப்பசியை தீர்க்கும் ஆலயமாக பெல்லிங்டன் நூலகம் விளங்கி வருகிறது. 
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, உருவாக்கிய பல திட்டங்கள் இன்றும் மக்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது. கடந்த 1845ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் இருந்த ஸ்ரீவில்லிபுத்துரில், அப்போதைய ஆட்சி தலைவர் பென்னிங்டன் உருவாக்கிய நூலகம், 144 ஆண்டுகளை கடந்தும், இன்றளவும் அறிவு களஞ்சியமாக விளங்கி வருகிறது. 
1,334 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த நூலகத்தில், தனிதனி பிரிவுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தங்கள் உள்ளன. அரசு வேலை வாய்ப்புகளுக்கான போட்டி தேர்வில் இளைஞர்கள் வெற்றிபெற பல வசதிகளும் இந்த நூலகத்தில் அமைத்து கொடுக்கப்பட்டிருப்பதால் ஏராளமனோர் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.
நூலகம் முற்றிலும் கணினி மையமாக்கபட்டுள்ளதால் எந்த புத்தகம் எங்கிருக்கிறது என்பதை தேடி அலையாமல், புத்தகம் இருக்கும் இடத்தை எளிதில் கண்டறிந்து எடுக்க முடியும். நூலகத்தை கண்காணிக்கவும் பராமரிக்கவும் முற்றிலும் பெண் பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இந்நூலகம், தமிழக அரசின் சிறந்த நூலகம் என்ற விருதை பெற்றுள்ளது. 
வாசகர்களுக்கு தேவைப்படும் அரிய நூல்களின் நகலை, ஸ்கேன் செய்து டிவிடியில் பதிவு செய்தும் கொடுப்பது என்பதும் இந்நூலகத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் இரண்டு ஆலயங்கள் உள்ளதாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆன்மீகத்திற்கு ஆண்டாள் கோவில் என்றும், அறிவுக்கு பென்னிங்டன் நூலகம் என பெருமையுடன் கூறியிருப்பது இந்நூலகத்தின் சிறப்புக்கு சான்று.