இறுதி அமைச்சரவையில், ஜனாதிபதி மைத்திரி


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
ஜனாதிபதி மைத்திரிபால இன்று தமது இறுதி அமைச்சரவைக்கூட்டத்தில் பங்கேற்றார்.

மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena, சிங்களம்: මෛත්‍රිපාල සිරිසේන) என்று அழைக்கப்படும் பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன (பிறப்பு: 3 செப்டம்பர் 1951).இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் ஆவார்.

1989 இல் அரசியலில் நுழைந்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். பாதுகாப்புப் பதில் அமைச்சராகவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2014 நவம்பர் 21 அன்று அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தார். சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, புதிய சனநாயக முன்னணியின் சார்பில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

மைத்திரிபால சிறிசேன 2019.11.17 ந் திகதியுடன் தமது ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

இலங்கையின் வரலாற்றில் மிகக் குறைந்த ஆண்டுகள் பதவி வகித்த (4 வருடங்களும் 3 மாதங்களும்) ஜனாதிபதியாக மைத்திரிபாலவே காணப்படுகின்றார்.