திருக்கோவிலில், இளைஞர் தற்கொலை

#இர்சாத்.
அக்கரைப்பற்று திருக்கோவில் பகுதியில் 19 வயது மதிகத்தக்க இளைஞர் ஒருவர் தனது வீட்டு மின் விசியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 11 மணியளவில்,வீட்டி்ல் யாருமற்ற நிலையில் இவர் துாங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

திருக்கோவில் வைத்தியசாலையில் வைக்கபட்டிருந்த பிரேதத்தை அக்கரைப்பற்று பதில் நீதிபதி இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான் பார்வையிட்டு மரண விசாரணையினை நடத்தியதுடன், பிரேதசப் பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கும் கட்டளை பிறப்பித்தார்.

குறித்த இளைஞர் ஒரு மாணவியைக் காதலித்து வருவதாகவும் அதனை நிறுத்துமாறு பெற்றோர் அன்மையில் அறிவுரை சொன்னதாகவும். அதில் அதிதிருப்தி அடைந்த இளைஞர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Advertisement