இந்திய அணி வெற்றி


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடர் சமநிலையில் உள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 33வது ஓவரில் ஷாய் ஹோப், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் தொடர்ந்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை செய்தார்.
இது சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு இரண்டாவது ஹாட்ரிக் ஆகும்.
2017இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் கிரோன் பொல்லார்டு பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பெட் செய்த இந்திய அணி ஐம்பது ஓவர்களில் இறுதியில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்தது.
ஆனால், இரண்டாவதாக பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஹோப் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் கேப்டன் கோலியைப் போலவே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்டும் டக் அவுட் ஆனார். இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
ரோஹித் சர்மாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடித்தனர்.
கே.எல். ராகுல் 104 பந்துகளில் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அல்ஜாரி ஜோசப்பின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேசுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 138பந்துகளில் 159 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் சர்மாவுக்கு இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆறாவது சதமாகும். கே.எல்.ராகுலுக்கு இது மூன்றாவது சதம்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஒரே பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
44வது ஓவரில் காட்ரெல் பந்து வீச்சில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். அவர் 159 ரன்கள் எடுத்திருந்தார்.