(வீடியோ) சீனாவிலிருந்த 33 மாணவர்கள் இலங்கை வந்தனர்


சீனாவின் வுஹானில் தங்கியிருந்த இந்நாட்டை சேர்ந்த 33 மாணவர்களுடன் வந்த விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.சீனாவின் வுஹானில் தங்கியிருந்த இந்நாட்டை சேர்ந்த 33 மாணவர்களுடன் வந்த விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 

 ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1423 ரக விசேட விமானம் இன்று காலை 07.25 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அத தெரண செய்தியாரளர் தெரிவித்தார். குறித்த 33 மாணவர்களையும் தியதலாவ இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், அவர்கள் அங்கு இரண்டு வாரக்காலம் தடுத்து வைக்கப்படவுள்ளனர். 

 அதன்படி,சீனாவில் இருந்து இதுவரை 604 இலங்கையர்கள் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்தார். மேலும் 204 மாணவர்கள் சீனாவில் தங்கியுள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1423 ரக விசேட விமானம் இன்று காலை 07.25 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த 33 மாணவர்களையும் தியதலாவ இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், அவர்கள் அங்கு இரண்டு வாரக்காலம் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

அதன்படி,சீனாவில் இருந்து இதுவரை 604 இலங்கையர்கள் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்தார்.

மேலும் 204 மாணவர்கள் சீனாவில் தங்கியுள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.