நிந்தவூர் சனசமூக அறிவியல் ஒன்றிய ஏற்பாட்டில்





Basheer Abdul Kaiyoom.
நிந்தவூர் சனசமூக அறிவியல் ஒன்றியம்(Community Sciences Consortium)
ஏற்பாடு செய்த "அக்கனி அறிவுச்சவால்"
2019 A/L பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடங்களைப் பெற்ற
M.M.Nabeehath Ayesha ( Physical Science)
A.A.Nashath Nutha ( Commerce) மாணவிகளைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(08-02-2020) நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் CSCஇன் தவிசாளர்-A.L.M.Ameen தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட நீதிபதி கெளரவ A.M.M.Riyaal அவர்கள் பிரதம அதிதியாகவும்,
பிரதேச சபைத்தவிசாளர் கெளரவ M.A.M.Ashraff Thahir மற்றும் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் M.S.Abdul Jaleel, ஆகியோர் அதிதிகளாகவும், மற்றும் பல கல்வியாளர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவிகளுக்கு, Memento வும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.


பணப்பரிசு இரண்டு கல்வியலாளர்களின் பெற்றோர் கரங்களால் மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.தமது பிள்ளைகளை கஷ்ரங்களுக்கு மத்தியில் சிரமப்பட்டு கல்வி கற்று முன்னேற வைத்த
கலாநிதி ஆதம்பாவா சர்ஜூன் அவர்களின் தந்தை காதர் ஆதம்பாவா அவர்களும், பொறியியல் துறைப்பேராசிரியர் பக்கீர்தம்பி அப்துஸ்சலாம் அவர்களின் தாயார் ரஷீதாஉம்மா ஆகியோர் கெளரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு சமூக அறிவியல் ஒன்றியத்தினால் ( CSC) ஏற்பாடு செய்யப்பட்ட பணத்தொகையினை மாணவிகளுக்கு கையளித்தனர்.