மருதமுனை அரச சேவையாளர்கள் அவையத்தின்,வருடாந்தப் பொதுக்கூட்டம்



மருதமுனை அரச சேவையாளர்கள் அவையத்தின் ( Maruthamunai State Servants' Organization) வருடாந்தப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (09-02-2020) அவையத்தின் தலைவர் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் Al.Haj- A.H.M.Ansar Sir அவர்களின் தலைமையில் "கலாச்சார மத்திய நிலையம்"- மருதமுனையில் இடம்பெற்றது.

அதிதியாக வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ Al.Haj - T.L.A.Manaff அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

மருதமுனை, பாண்டிருப்பு முஸ்லீம் பிரிவு, பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவு போன்ற இடங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கான பல்வேறு சமூக மேம்பாட்டுத்திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்காக இவ்வமையம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.