24 மணித்தியாலங்களில் யாரும் பதிவாகவில்லை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக நேற்றிரவு (26) புதிதாக இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்திருந்தது.
ஏற்கனவே கடந்த 24ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படாத பின்னணியில் 48 மணித்தியாலங்களின் பின்னர் நேற்று மாலை இருவர் புதிதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன்படி, நேற்றைய தினம் 4 கொரோனா தொற்றுக்குள்ளானோர் புதிதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 7 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், 99 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் அடங்குவதாக சுகாதார பிரிவு குறிப்பிடுகின்றது.


Advertisement