தொழுகையில், ஈடுபட்டோர் கைது


ஊரடங்கு உத்தரவை மீறி, ஹொரொவபொத்தானையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 80 பேருள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாது தொழுகை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொழுகையில் ஈடுபட்ட பெரும்பாலானோர் தப்பிச் சென்றுள்ளதுடன், அந்த பள்ளிவாசலின் தலைவர் உள்ளிட்ட 18 பேரை மாத்திரமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொழுகையில் ஈடுபட்ட நிலையில், தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, களுத்துறை – அட்டுளுகம கிராமம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அந்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அந்த கிராமத்தை முடக்குவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுமார் 26 குடும்பங்களைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்டோர் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமத்திற்குள் உள்ளவர்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளிநபர்கள் கிராமத்திற்குள் செல்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.