இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறும் நிலையில், இந்தியாவில் நான்காவது மரணம் பதிவாகியிருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 15 பேர் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சர்தேச விமானங்களுக்கும் தடை
மார்ச் 22ஆம் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு இந்தியாவில் சர்வதேச விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் 65 வயதிற்கு மேலான நபர்கள், மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அனைத்து மாநில அரசுகளும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
GETTY IMAGES
இந்திய தலைநகர் டெல்லியில் மார்ச் 31ஆம் தேதி வரை உணவகங்கள் மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்படும் என்றும் பார்சல் மற்றும் உணவு விநியோக சேவைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் எந்த நிகழ்வாக இருந்தாலும், 20 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேருக்கும், அடுத்ததாக கேரளாவில் 25 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிர அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "நாம் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போரிடுகிறோம். நாம் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும். நிலைமை சிக்கலானதாக இல்லை என்றாலும் கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதியிடம் பேசினேன். மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்" என்று கூறினார்.
இந்நிலையில், மார்ச் 15ஆம் தேதி இண்டிகோ 6E96 விமானத்தில் பயணித்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கர்நாடகாவில் குடகு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி உரை
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டு அந்த நாட்டை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.



Post a Comment
Post a Comment