#பொத்துவில் :பிரித்தானிய சுற்றுலா பெண்ணுக்கு வன்புணர்வு




(பின்னிணைப்பு).
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் இருவர் ஒருவர் 18 வயது,மற்றயவர் 19 வயது யுவதிகள் இருவர், பொத்துவில் பிரதேசத்தில் தங்கியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்த ஒருவரால் முயற்ச்சி மேற்கொள்ளபபட்டுள்ளது. ஒருவர்  பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு தற்பித்துக் கொண்ட வேளை,மற்றய யுவதி மீது பாலியல் வன் புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிரிட்டன் யுவதி பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிசார் சந்தேக நபரைத் தேடி வலை விரித்துள்ளனர்.



(முன்னைய இணைப்பு)
பிரித்தானிய சுற்றுலாப் பயணி மீது பாலியல் பலாத்காரம்.

இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா பணியாக வந்த 18 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிய நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Rep/PottuvilNet.