#Rep/Vithusan.
கொரோனாவைரஸ் தாக்கத்தை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடமாக ஹந்தல வைத்தியசாலை மாற்றப்பட்டதை கண்டித்து வத்தளை எலகந்த பகுதியில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களுக்கான பிரதான தனிமைப்படுத்தப்பட்ட மையமாக இந்த வைத்தியசாலை மாற்றப்படும் என சுகாதார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தற்போது அங்கு கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment