வெறிச்சோடிய க.°.பா
(Mohamed Nizous)
சூறாவளி வந்து தாக்க
சுற்றி மரங்கள் 'வெறிச்சோட'
நேரே கண்டு நொந்து போனோம்
நிலைமை எண்ணி வெந்து போனோம்
ஊரடங்குச் சட்டம் போட
உள்ள வீதிகள் 'வெறிச்சோட'
பார்த்துப் பார்த்து பயந்து நின்றோம்
பலருக்கும் மனத் தாக்கம்.
பள்ளியிலே சுட்ட காலம்
பாடர்கள் 'வெறிச்சோட'
உள்ளம் பயம், கவலைகளால்
உடைந்தது நினைவிருக்கு
சுனாமி வந்து சுருட்டிப் போட
சுக வாழ்வு 'வெறிச்சோட'
மனதில் எழுந்த கவலை அலை
மாதக் கணக்கில் வாட்டியது
வெள்ளம் வந்து உள் நுழைய
வீட்டு நிலை 'வெறிச்சோட'
இல்லம் மீள அமையும் வரை
எழுந்தது பெருங் கவலை
இத்தனை 'வெறிச்சோடல்'
இந்த வாழ்வு பார்த்திருந்தும்
அத்தனைக்கும் மேலே கவலை
ஆளில்லாக் க.°.பாக் கண்டு
இலட்சக் கணக்கு அடியார்கள்
இபாதத் செய்யும் க.°.பா இன்று
யாருமே இல்லா நிலையில்
இருக்கிறது 'வெறிச்சோடி'
இந்த நிலை கண்டு பலர்
ஏங்கித் தவிக்கின்றார்
சிந்தையிலே கவலை வர
நொந்து வாடுகிறார்
ஆண்டாண்டு காலமாக
ஆண்டவனைத் துதித்த இடம்
மீண்டும் அதே நிலைக்கு
மீள வேண்டும் பிரார்த்திக்கிறார்.
கிருமி அழிய வேண்டும்
கெட்ட நோய் போக வேண்டும்
உருகி துஆக் கேட்போம்
உள்ள வழி வேறில்லை.
(Mohamed Nizous)
சூறாவளி வந்து தாக்க
சுற்றி மரங்கள் 'வெறிச்சோட'
நேரே கண்டு நொந்து போனோம்
நிலைமை எண்ணி வெந்து போனோம்
ஊரடங்குச் சட்டம் போட
உள்ள வீதிகள் 'வெறிச்சோட'
பார்த்துப் பார்த்து பயந்து நின்றோம்
பலருக்கும் மனத் தாக்கம்.
பள்ளியிலே சுட்ட காலம்
பாடர்கள் 'வெறிச்சோட'
உள்ளம் பயம், கவலைகளால்
உடைந்தது நினைவிருக்கு
சுனாமி வந்து சுருட்டிப் போட
சுக வாழ்வு 'வெறிச்சோட'
மனதில் எழுந்த கவலை அலை
மாதக் கணக்கில் வாட்டியது
வெள்ளம் வந்து உள் நுழைய
வீட்டு நிலை 'வெறிச்சோட'
இல்லம் மீள அமையும் வரை
எழுந்தது பெருங் கவலை
இத்தனை 'வெறிச்சோடல்'
இந்த வாழ்வு பார்த்திருந்தும்
அத்தனைக்கும் மேலே கவலை
ஆளில்லாக் க.°.பாக் கண்டு
இலட்சக் கணக்கு அடியார்கள்
இபாதத் செய்யும் க.°.பா இன்று
யாருமே இல்லா நிலையில்
இருக்கிறது 'வெறிச்சோடி'
இந்த நிலை கண்டு பலர்
ஏங்கித் தவிக்கின்றார்
சிந்தையிலே கவலை வர
நொந்து வாடுகிறார்
ஆண்டாண்டு காலமாக
ஆண்டவனைத் துதித்த இடம்
மீண்டும் அதே நிலைக்கு
மீள வேண்டும் பிரார்த்திக்கிறார்.
கிருமி அழிய வேண்டும்
கெட்ட நோய் போக வேண்டும்
உருகி துஆக் கேட்போம்
உள்ள வழி வேறில்லை.


Post a Comment
Post a Comment