தல" என்றே அழைக்கின்றனர்



சென்னை மட்டுமல்லாமல் தென்னகத்தில் யாரும் தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை, அன்பாக "தல" என்றே அழைக்கின்றனர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.


13 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தோனியைப் பற்றிய தகவல்களை அவர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
image
சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், அடுத்ததாக அவர் விளையாடவுள்ள போட்டி ஐபிஎல் தொடர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருக்கிறார். தோனியின் ரசிகர்கள் அவரது ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். சென்னை வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
image
இந்நிலையில், சிஎஸ்கே குறித்தும் சென்னை குறித்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு மனம் திறந்து பேசியுள்ளார் தோனி. அந்தப் பேட்டியில் அவர் " இந்த பயணம் 2008-ல் தொடங்கியது. களத்திலும் களத்திற்கு வெளியிலும் ஒரு மனிதனாக, கிரிக்கெட் வீரராக எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை கையாளும் கலையை கற்றுக்கொள்ள உதவியது ஐபிஎல் போட்டிகள்தான்.
image
தல என்றால் சகோதரன் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தப் பெயர்தான் எனக்கு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது. எப்பொழுதெல்லாம் நான் சென்னை வருகிறேனோ அப்பொழுதெல்லாம் ரசிகர்கள் என்னை தல என்றே அழைக்கிறார்கள், யாரும் என்னுடைய பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. தல என்று அழைக்கும் போது, அவர்கள் எனக்கு கொடுக்கும் மரியாதை, அன்பு தான் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.